Wednesday, 6 June 2012

உலகம் இவ்வளவு தான்



வெற்றி என்பது விண்மீனல்ல
எட்டிப் பிடித்து ஏமாந்து பேவதற்கு
உன் வியற்வை துளி!!!
சிந்தித்துப் பார்...
விழி விழி உன் விழி நெருப்பு விழி
உன் விழிக்குள் சூரியன் சின்னப் பொறி
சிறு சிறு துளிகள் உன் வியற்வைத் துளி
விழுந்தாள் அதுவே உன் வெற்றிப் படி
தடைப் பல கடந்தால் - உன் எண்ணப் படி
வெற்றிகள் பல கடக்கும் உன் வாயிற் படி
ஓயாமல் ஓடும் மனிதா ஒரு நிமிடம் ஓய்வெடு
ஓடும் இலக்கை தீர்மானி
ஓடும் பாதயை நிர்மானி
எதுவும் கிடைப்படதில்லை எளிதாக இவ்வுளகில்
கருவுறூம் போதே கற்றுக்கொண்ட பாடம் இது
ஏன் கருவறை விட்டு வெளி வந்தவுடன்
கழுவ நினைக்கிறாய்?
மறைக்க நினைக்கிறாயா அல்லது மறக்க நினைக்கிறாயா?
தளராதே நண்பா
உலகம் இவ்வளவு தான்...
உணர்ந்ததை உரைக்கிறேன் ஓர் இரு உதாரணங்களுடன்
 படைத்ததை தந்தேன் பக்குவமில்லை என்றது
எடுத்ததை தந்தேன் ஏமாந்தவன் என்றது
வறுமைக்கு உதவினேன் வஞ்சகன் என்றது
எளிமையாய் இருந்தேன் ஏளனம் செய்தது
சிக்கனம் பழகினேன் கஞ்சன் என்றது
அதுவும் தப்பு இதுவும் தப்பு
எதுவும் தப்பு எல்லாம் தப்பு
தப்பென்றென்று தரணியில்லை
தளராதே மனிதா தனித்துவம் காட்டு
ஒன்றை மட்டும் புரிந்துகொள்
கம்பன் கூட களவாணி தான் வால்மிகியின் வலயத்துக்குள்
இன்னும் கூட உரைக்கிறேன் என்னுயிர் நண்பணுக்காக
புகழ்சிக்கு ஏங்காதே
இகழ்சிக்கு நோவாதே
முயற்சிக்கு மறவாதே
வளற்சியை நழுவவிடாதே
முடியும் என்பதை மூச்சுக் காற்றாக்கு
முயற்சி செய்
முயற்சி செய்தால் முகிலையும் எட்டி பிடிக்கலாம்...

No comments:

Post a Comment