Wednesday, 6 June 2012

கவிஞன் கூட கற்பனை தான்



அன்பே!!!
ஓர் வரியில் வடிக்கச் சொன்னாய் ஓர் கவிதையை
தமிழ் தெருவெல்லாம் தேடி அலைந்தேன்
தேடிய எனக்குள் தென்பட்ட்து ஓர் கவிதை


பெண்ணே!!!
எத்துனை எளிமையாய் எடுத்தியம்பினாய்
உன் எண்ணச் சிதறல்களை!
உனக்குள் இருப்பதை எனக்குள்
கொணர்ந்தாய் உன் விழியசைவினால்
என் நினைவுகளுக்கு
உருவம் படைத்தாய் உன் செயலழகினால்
நான் நினைப்பதை செய்தாய்
நான் நினைக்கும் முன்பே
ஆனால்
பேதை பெண்ணே...
நான் நினைத்தும் கூட – நீ
மறைக்கிராய்
விளையாட்டு போதும் பெண்ணே
உன் விழிக்குள் நான் சிறைப்பட்டு
வெகுகாலம் ஆகிவிட்டது


வீரன் நான் என்றாலும் விழ்கிறேன்
உன் முன்னே கோழையாக...


ஆயுதம் ஏந்தி நிற்கிறேன்
நிராயுத பாணியாக...


இதுதான் முதன் முறை


கோழையாக வீரனானது
தோல்வியிலும் சுகம் கண்டது


என்னை விடாமல் துரத்தினாய்
நீ தேடும் விடைக்காக
பெண்ணே!
உண்மையை உரைக்கவா
நீ உணர்ந்திருக்க நியாயமில்லை
நீ என்னை துரத்தியதை விட
நான் உன்னை துரத்தியது தான் அதிகம்


இதோ
மவுனம் களைகிறேன்;
மவுனம் தான் என்றாலும்
மலைமுகடில் நின்றாலும்
கடுகளவு கண்ணசைந்தால்
காலமெல்லாம் உன் விழியில்
இரவு பகல் மாறினாலும்
இளமை அது மறைந்தாலும்
இனி
நிலவுலகில் நான் வாழ – ஆயுதமாய்
உன் அன்பு ஒன்று போதுமடி
தயக்கம் தான் என்றாலும்
தடுமாறாமல் உரைக்கிறேன்...


நான் கண்ட கவிதை வேறொன்றும் இல்லை
“காதல்”
“காதல்” தான் அது


உண்மையை உறைத்தேன்
உலகம் அதிர உன் உதடுகள் மலர்ந்தாய்
சிரிப்பால் என் சிந்தனையை சிலைசெய்தாய்
உன் கருமணிகள் கண்விழியில் நீந்த
உன் நாணங்கள் மேகங்களாக
நனைந்த்து இவ்வுலகம், நனைத்தது உன் விழிகள்
இப்போது உணர்ந்தேன் நான்
நீ தேடும் விடை கூட இதுவென்று;
விடைத்தெரிந்த நாம் இருவரும்
விடைபெற்று பிரிந்தேம்
விடையறியா வினாக்கலுக்காக
அன்பே!!!
அனறே நீ உணர்ந்திருந்தாய்
சிலையாய் நின்ற நானே!!!
மறுபிறவிப் பெற்று
மனிதனாய் மாறி
இன்று தான் உணர்கிறேன்
கவிஞன் கூட கற்பனை கதாபாத்திரம் என்று...

No comments:

Post a Comment